கடைசி செய்திகள்
Home / நயினாதீவு / நயினாதீவுச் செய்திகள் / யாழ் நயினாதீவைச் சேர்ந்த குடும்பஸ்தர் பொலிஸாரால் கைது…

யாழ் நயினாதீவைச் சேர்ந்த குடும்பஸ்தர் பொலிஸாரால் கைது…

1496
யாழ் நயினாதீவைச் சேர்ந்த குடும்பஸ்தர் பொலிஸாரால் கைது…

நயினாதீவு பகுதியைச் சேர்ந்த திரு கோ. அம்பிகைபாலன் அவர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரால் 30.10.2016 அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

எமது பகுதியில் பிரபல வர்த்தகரான இவர் தனது வீட்டில் இருந்த போது ஊர்காவற்துறை பொலிஸாரால் நயினாதீவு பொலிஸாரின் அனுமதியுடன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிய வருகிறது..

அங்கு இடம் பெற்ற விசாரணையின் போது இவரது மகன் ஒருவர் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் அவர் அந்நாட்டில் இயங்கிவரும் LTTE அமைப்புடன் தொடர்புகளை வைத்திருப்பதாகவும் அங்கு இடம்பெறுகின்ற இலங்கை அரசு மற்றும் ஆயுதப்படைகளுக்கும் எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதாகவும் தொடர்பான குற்றச்சாட்டில் மேற்கொள்ளப்பட்டதாக அறிய முடிகிறது.

மேலும் விசாரணை முடிவடைந்த பின்னர் அச்சுறுத்தப்பட்டு 30.10.2016 பிற்பகலே விடுதலை செய்யப்பட்டதாக தெரிய வருகிறது.

இவ்வாறாக எமது பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டில் வாழும் இளைஞர்களின் பெற்றோர்கள் 10 க்கு மேற்ப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு அச்சுறுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு சிலர் இன்னும் விடுதலை செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தற்கால அரசாங்க அதிபர் மைத்திரி ஸ்ரீ சேனா அவர்கள் வெளிநாடுகளில் புலிகள் பலமாக இயங்கி வருவதாக வெளிநாடு ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்தே CID பிரிவினர் வெளிநாடுகளில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் LTTE சார்பான குடும்பத்தினர் மீதே கடும் விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

இதனால் வடபகுதிகளில் அசாதாரண நிலை காணப்படுகின்றது. மீண்டும் வெள்ளைவான் கடத்தல்களும், கைதுகளும், மிரட்டல்களும் இடம் பெற்றுக் கொண்டே இருக்கின்றது. அண்மையில் இரண்டு யாழ் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் பொலிஸாரால் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் இருக்கும் LTTE சார்பான குடும்ப உறுப்பினர்கள் தமது சொந்த ஊருக்கு வரமுடியாத நிலை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*